பாதையில் உபாதை கவிதை

*
நாளும் வளர்கிறது
நகரம்.
அகன்று விரிந்த சாலைகள்
நடைபாதையெல்லாம் கடைகள்
பரபரப்பான வியாபாரம்
எங்கும் மக்கள் கூட்டம்
மிகுந்த நெரிசல், இடிசல்.
*
ஆக்ரமிப்புக் கடைகள்
அகற்றப்படுகின்றன
நடைபாதைகளில்
நெரிசல் குறைந்து
இடிபாடுகளில்லாமல்
போக முடிகிறது.
சற்றே நிம்மதியாய்…
*
மழை நாள்களில்
சாக்கடைக் கழிவுகள்
தேங்கிய பகுதிகளில்
சேறும் சகதியுமாய்…
நிரம்பி வழிகிறது
சரியா? தப்பா?
பாண்டி விளையாடி
நடக்கிறார்கள்
பாதசாரிகள்.
*
மேடும் பள்ளமும்
சாலையின் புண்கள்
ஆறாத ரணங்கள்
கவனமாய்
போகவில்லையெனில்
வாகன விபத்துக்கள்
மனிதர்களின் நெஞ்சைப்
பதற வைக்கிறது
அகால மரணம்
உயிரிழப்புக்கள்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (18-Apr-14, 9:13 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 65

மேலே