ஆதலால் காதல்

மானிட காதல் மதி மயக்கும்!
இயற்கையின் காதல் உவப்பளிக்கும்!
உலகை இயக்கும்!
பறவையின் காதல் படபடக்கும்!
கால பருவத்தின் காதல் சுகமளிக்கும்!
கார் மேகத்தின் காதல் நல் மழையளிக்கும்!
கல்வியின் காதல் ஞானமளிக்கும்!
கலவியின் காதல் மதி கெடுக்கும்!
ஆன்மீக காதல் அகம் களையும்! அருள் பயக்கும்!
அறிவியலின் காதல் கண்டுபிடிக்கும்!
அரசியலின் காதல் ஆட்சியை பிடிக்கும்!
அறவழியின் காதல் அன்பை பெருக்கும்!
ஆனந்தம் நல்கும்!
கலைஞர்களின் காதல் கருத்து களஞ்சியம்!
கவிஞர்கள் காதல் மனோ பிரளயம்!
ஆதலால் காதல் செய்வீர்!
கானல் நீராய், கால ஓட்டத்தில் சங்கமிப்பீர்!