எம் தேசத்தின் தலையெழுத்து

என் தேசமெங்கும்
பச்சை வனப்பு...

ஆண்டு முழுதும்
ஆட்சி செய்யும் வெயில் ...

காயாத கங்கைகள் ...
நலிந்து போகாத நதிகள்...

அறுந்து போகாத அருவிகள்...
நீர் நிறைந்த கிணறுகள்...

தேன்கூடுகள் நிறைந்த காடுகள்...
தீண்டத் தூண்டும் முகடுகள்...

உழைப்பின் வர்க்கங்கள்...
உறுதியான உள்ளங்கள்...

வளையல்கள் அணிந்தாலும்
அவை வாள் பிடிக்கும் கரங்கள்...

அடி முதல் முடி வரை
என் தேசமெங்கும்
புதைந்திருக்கும்
அற்புத புதையல்கள்...

எங்கள் இளைஞர்கள்
திருத்த தேவை இல்லாத
தேர்வுத்தாள்கள் ...

எல்லாம் இருந்தும்
ஆட்சியாளர்களின் கைகளில்
நாங்கள் ஆட்டு மந்தைகள் ...

எழுதியவர் : க நிலவன் (18-Apr-14, 6:01 pm)
பார்வை : 211

மேலே