என்றோ பெய்த பார்வைத்தூரலில் இன்று நனைகிறேன்-வித்யா

அவனது பார்வைகள்
என் கண்களில் நிலை கொண்டன......
எனதிரு கண்கள்
அவனது பார்வைகளை புறக்கணித்தன.......!

எனது பார்வைகள்
அவன் கண்களில் நிலை கொண்டன....
அவனிரு கண்கள்
என் பார்வைகளை அலட்சியபடுத்தின...........!

அவன் எனது பார்வைகளின்
வசீகரங்களை இழப்பதை
உணர்ந்திருக்க கூடும்........
தொடர்ந்து அவன் விழிகள்
என் பார்வைக்காக மண்சோறு
தின்றுக்கொண்டிருந்தன...........!

அவன் வேண்டுதல்களுக்கு
செவிசாய்க்க மனமில்லாமல்
என் விழிகள்........
புறக்கணிப்பு போராட்டம்
நடத்திக் கொண்டிருந்ததன..................!

(hide &seek ) கண்ணாமூச்சி ஒருவாறாக
முடிவுக்கு வந்தது.........
நால்விழிப் பார்வைகள்
ஒற்றைப்புள்ளியில்
நிலைக்கொண்டன........
பரபரப்பான விழிகள்
சற்றே அமைதிகாத்திருந்தன.......
அநேகமாக மறுபடியும்
ஒரு பார்வை யுத்தத்திற்காக
தயார்படுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும்......!

அப்போது காட்சிப்பிழையென
சுயநல ஊடகம் ஒன்று
பார்வைகளின் பிரதிபலிப்புகளை
பறிமாறவிடாமல் உள்வாங்கிக் கொண்டிருந்தது......!

இப்போது எனது விழிகள்
அறிந்திருந்தன......
அவன் விழிகள் என் விழிகளில் தேடிக்கொண்டிருந்தது யாதென......!

அப்பார்வைத்தூரல்களின்
தொடக்கம் அழகாகவும்
முடிவு கொஞ்சம் சோகமாகவும்
இருந்தது........!

ஒன்று மட்டும்......
என்னால் உறுதியாக சொல்லமுடியும்
என் கண்கள் சொல்லாமல் விடைபெற்றபோது
அவன் பார்வைத்தேடல் தேடித்தேடியே ஒற்றை புள்ளியில் மரணித்திருக்க கூடும்..............!


கணநேரத்தில் நீண்டிருந்த
பார்வை நீட்டிப்புக்களில்
விழிகளை தொலைத்து
நின்றிருந்த தருணம்......
கொஞ்சம் தூரல் போட
தொடங்கியிருந்தது இன்று என்னுள்.......!

ஆம்.............
என் விழிவானில்
என்றோ பெய்த பார்வைத்தூரலில்
இன்று நனைகிறேன்...........!

எழுதியவர் : வித்யா (18-Apr-14, 8:01 pm)
பார்வை : 244

மேலே