மனிதம்
'' மனிதம் ''
'' உடல் உயிர் உள்ள ,
இரு பிரம்மாக்கள் //
அறிந்ததும் , அறியாததும் ,
இவர்களது சொத்துக்கள் //
'' மக்களையே ,
ஆட்டிப்படைப்பவன் மனிதன் //
அழுதுக்கொண்டே பிறந்து ,
அழுதுக்கொண்டே இறப்பவனும் மனிதன் //
'' கலைகளை ,
உருவாக்கியவன் மனிதன் //
சிந்தனையில் சீர்த்திருத்த ,
வாதியானவனும் மனிதன் //
'' உலகையே ரசிக்க ,
வந்தவன் மனிதன் //
அநாகரீகத்தை மறைத்து ,
நாகரீகத்தை வளர்த்தவனும் மனிதன் //
'' இயற்கையையும் இறைவனையும் ,
வேறு படுத்தியவன் மனிதன் //
மதத்தை உருவாக்கி (மதம் )-
பிடித்து திரிந்தவனும் மனிதன் //
'' சொன்னதை ஏற்ப்பவன் ,
மனிதன் ,சொன்னதை ஆராய்ந்து ,
பார்ப்பவன் - மா -மனிதன் //
'' அறிவை பயன்படுத்தி ,
அழிவை அறிதாக்கிக்கொண்டவனும் ,
மனிதன் // மனிதன் // மனிதன் //
(எ - கா ) மனிதனின் ஆயுட்காலம் ///
- இப்படிக்கு சிவகவி //