மனமே ஓ மனமே நீ மாறி விடு

சுய ஒழுக்கம்
சுய மதிப்பு
சுய மரியாதை எனும்
நாற்றுகளை நட்டு

சுய பச்சாத்தாபம் என்ற
களையை களைந்து

அக அமைதி எனும்
பயிற்றை அறுவடை செய்து

நகைச்சுவை எனும் அறுசுவையை
உணவில் கொண்டு

தன்னம்பிக்கை எனும்
ஆடையை அணிந்து

மகத்துவமான
மன நிலையை என்றும் பெறுவோம் .

நடைமுறையை மாற்ற முடியாது
நடக்கும் முறையை தான்
மாற்றி கொள்ள வேண்டும்

பரந்து விரிவோம்
பாரமில்லா மனதை பெறுவோம்

கடந்த கால காயங்களை மறப்போம்
கடந்த காலம் கற்று கொடுத்த
அனுபவங்களை நினைவில் நிறுத்தி ..

ஒப்பீடுகளை ஒதுக்குவோம்
ஒய்யாரமாய் நடை போடுவோம்
முன்னேற்ற பாதையில்

நம்பிக்கை எனும் உயிர் காற்றை உள்ளிழுத்து
மன அழுத்தம் என்ற
கரிமிலக் காற்றை வெளி விடுவோம்

ஒவ்வொரு நாளின் உதகையில்
நம்மை நாமே நேசிப்போம்
ரசிப்போம்
பாராட்டுவோம் நாம் படைத்த
சின்னஞ்சிறு சாதனைகளை நினைத்து

மனதின் அழுக்கினை
சலவை செய்து

சவால்களை ஏற்று
சாதனை புரிவோம்

நம்மிடம் உள்ள நல் குணங்களை பெருக்கி
மன முதிர்ச்சியையும்
தன்னம்பிக்கையையும் வளர்த்து

உற்சாகமான மனதை என்றும் பெறுவோம்

மனமே! ஓ மனமே! நீ மாறி விடு !
சரிவோ !இல்லை தடையோ !
நீ தாண்டி விடு ........

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (19-Apr-14, 10:00 pm)
பார்வை : 219

சிறந்த கவிதைகள்

மேலே