மகிழ்வு வரம்

மகிழ்வு ஓர் அழகிய வரம்...!
இதற்காக பெரிய தர்மங்களையோ,
கடும் தவங்களையோ
இயற்ற வேண்டிய அவசியமில்லை...
எங்கே இருக்கிறாய் நீ என்று தேடி
அலைய வேண்டி தேவையுமில்லை..
களங்கம் அறியா முகங்களிலும், (குழந்தைகள்)
கருணை பொங்கும் கண்களிலும்,
நேசங்கள் நீக்கமற நிறைந்திட்ட,
உண்மையான அன்பு மனம் கொண்ட
எல்லோரிடத்தும் அது இயல்பாகவே
குடி கொண்டிருக்கிறது...!

மகிழ்வோம்...! மகிழ்விப்போம்...!

எழுதியவர் : பிரியன் கண்ணன் (20-Apr-14, 12:51 am)
Tanglish : makizhvu varam
பார்வை : 112

மேலே