புத்தர்
அமைதியை
புறத்தில் தேடாதே
அகத்தில் தேடு.
கடந்த காலத்தில்
புதையாதே!
எதிர் காலத்தின்
கனவுகளில் மிதக்காதே !
நிகழ் காலத்தில்
மனதை செலுத்தி வாழ் !
விலை மதிப்புள்ள
பரிசு
தேக ஆரோக்கியம்
விலை மதிப்பெற்ற
சொத்து
போதும் என்ற பொன் மனம்
உன்னதமான
வாழ்வு
உண்மையான உறவுகளில் !
கோபத்தை நிலை நிறுத்துவது
எரியும் கரியை
கைகளில் ஏந்துவதற்கு சமானம்
நம் கையையே அது சுட்டு விடும்
நாக்கு கத்தியை போன்றது
இரத்தம் வராமலே கொன்று விடும் .
என்ன செய்ய பட்டது
என்பதை பார்க்காதே
என்ன செய்ய வேண்டும்
என்பதை பார் !
நாம் எண்ணங்களினால்
உருவாக்க படுகின்றோம்
நாம் என்ன நினைக்கின்றோமோ
அதுவாகவே ஆகின்றோம்
மனம் தெளிவாக இருந்தால்
சந்தோசம் நிழல்
போல் அதை தொடரும் .
சந்தோசம் பகிர்தலால் என்றுமே
குறையாது .
ஓவியம் கிருபகணேஷ்