பெண்ணே உனைத் தேடி
அஸ்தமிக்கும் சூரியன்,
அழகான நிலா,
கால்களை உரசிடும்,
கடல் அலைகள்,
அங்கங்கே சிரிக்கும்
அழகிய நட்சத்திரங்கள்
இயற்கையின் அத்தனை
அழகும் என் முன்னால். .
ஆனால் என் மனம் மட்டும்
உனைத் தேடி தவிக்கிறது.