கனாக்காலம்

கார் குழல் முடிந்து
கால் மலர் பரப்பி
தேன் குடம் வந்தாள்
எனைத் தேடி

யாரிவள் என்று
ஓர்மையில் நின்று
இளமையைத் தின்று
இவளிடம் முடிந்தேன்

வேரெனப் புகுந்தாள் இதழாலே
வேறென்ன வேறென்ன இனிமேலே

விதியெனத் தொடர்ந்தாள்
நதியென நடந்தாள்
கதியெனக் கிடந்தேன்
கனவுடன் பறந்தாள்

எழுதியவர் : ராசைக் கவிபாலா (20-Apr-14, 4:23 pm)
பார்வை : 93

மேலே