கிராம கீதம்

ஆண் :ஒத்த ரூவா பொட்டு வச்ச கிளியே-என்ன
ஓட ஓட வெரட்டுறியே ரதியே !

பெண்: வெட்டருவா மீச வச்ச புலியே-என்ன
வேக வச்சுப் பார்க்குறியே தனியே

ஆண் : அடி கண்ணால குத்துறியே
என் முன்னால நிக்கயில
..................................
மஞ்ச தேச்சு குளிக்கையில- நான்
மச்சம் பாத்து தவிக்கையில
ஒத்த ரூவா பொட்டு வச்ச கிளியே-என்ன
ஓட ஓட வெரட்டுறியே ரதியே !
பெண் : கொஞ்சம் விட்டா கிதிக்கிறியே
பஞ்ச நூலா திரிக்கிறியே
ஆண் : நாலும் மூனும் ஏழு தானடி
நான் நாலு நாளா தூங்கலியேடி

பெண் : எட்டும் பத்தும் பதினெட்டு -நீ
எடத்த விட்டு நட கட்டு
வெட்டருவா மீச வச்ச புலியே-என்ன
வேக வச்சுப் பார்க்குறியே தனியே


ஆண் : ஐயாறு அரிசிச் சோறு
அயிர மீனுக் கொழம்புச் சாறு
கையால ஊட்டி விடு
கண்ண மூடிக் கையில் படு

பெண் : ஆச மச்சான் அரும மச்சான்
மீச வச்சானே
வேகாத சோறு திங்க ஆச வச்சானே

ஆண் : ஓடத் தண்ணி ஒன்னப் பாத்து
மஞ்சளாச்சுடி
ஒன்ன ஒரசிப் பாத்த ஒலக்க கூட
தங்கமாச்சுடி
பெண் : ஆடிக்காத்து அடிக்கையில
சேல நழுவுது

ஆண் : அடி அப்பக்கூட கோவத்துல
மீச துடிக்குது

பெண் : மாசி மாசம் காத்திருக்கு ஆச மச்சானே

ஆண்: நான் பாசி மால வாங்கியாந்து
பாக்கு வைப்பேனே

எழுதியவர் : ராசைக் கவிபாலா (20-Apr-14, 4:59 pm)
Tanglish : kiraama keetham
பார்வை : 103

மேலே