தேர்தல் முத்திரை

புழுக்களுக்கு ஆசைப்பட்டு
தூண்டியில்
நீண்டு தொங்கிய மீனைப்போல்
நீண்டது
காசுகளுக்காய் ஆசைப்பட்டு
வாக்களித்த
ஜனனத்தின் உரிமைகள் !

வெந்து தணிந்து
சமாதானப்படுதப்பட்டது
சமூகக்கோபம்
எலும்பு துண்டுகளை வீசியெறிந்து
நாய்களை சமாதானப்படுத்துவது போல்!

கொள்ளையிட்ட பணமூட்டைகளை
மீண்டுமாய் கொட்டும்
முதலீட்டு காலமானது
தேர்தல் !..-ஆதலால்
விலைபேசி
விற்றுத்தீர்ந்தது வாக்குகள்
கடந்த தேர்தலைக்கட்டிலும்
அதிக விலைக்கே !

தேர்தல் திருவிழாக்கள்
வாரியிறைத்த
காசு புழுதியில் ...
நிரந்தரமாய்
புதைந்து தொலைந்தது
எழுந்து நிற்க
தெம்பில்லாத ஜனநாயகம்.!

இனியாவது மாற்றிக்கொள்வோம்
விதிகளை ...
காசுகளோடு கட்சிக்காரர்கள்
வீடுதேடி வந்தாள்
நம் பொன்னான முத்திரையை
உடனே பதிவு செய்வோம் ..
நம் கால்களை சுமந்த
செருப்பை கழற்றி ....

எழுதியவர் : நேதாஜி .அ (20-Apr-14, 8:06 pm)
Tanglish : therthal muthtirai
பார்வை : 655

மேலே