அலைப்பேசி காதலி

என்
உள்ளங்கை
உடலுக்கு
உயிர்த் துடிப்பே
நீ தானடி
என்
ஆசை
அரவணைப்பில்
அலறி எனை
நீ
அன்பாய்
அழைக்கும்
அழகோ
தனி அழகடி
நீ இன்றி
நான்
வாழ்ந்தும்
வாழ்விழந்த
வாழா வெட்டியடி
உன்னை
தீண்டாத
என்
விரல்களும்
வாழ்வு தொலைத்த
விதவைகளடி
என்
கற்பனைக்கேற்ப
உன்
முகத்திரையில்
தினம் ஒரு ஒப்பனையடி
உன்
தொடுதிரைக்கும்
என்
விரல் நுனிக்கும்
இடை
தொடத் தொட
தொடரும்
ஊடல்களும்
கூடல்களும்
காதலின்
உச்சமடி
தொழில் நுட்பத்துக்கேற்ப
உன்
எழில்
நுட்பம் மாற்றும்
நீ
நவ
நாகரிக நங்கையடி
இருந்தும்
என்
ஒரு
விரல் அசைவுக்கு
மௌனித்து அடங்கும்
நீ பண்பின்
குணச்
சிகரமடி
குறு குறு கண்களில்
குறுந்தகவல்
ஏந்தி
அலையாய்
நீ வருவாயடி
இன்பமோ
துன்பமோ
இரண்டையும்
இன்முகத்துடன்
அழைத்து
மென்மையாய்
உண்மை
உரைப்பாயடி
எனை
களைப்பாற்ற
பல குரல்களில்
பண்
இசைத்து
இனிப்பாயடி
சொற்ப மின்சார
ஊட்ட
உணவில்
நாளெல்லாம்
என்
சம்சாரமாய்
ஜொலிப்பாயடி
உன்
இதழ்களையும்
செவிப் பறைகளையும்
எனக்காகவே அர்ப்பணித்த
நீ வரலாறு கண்ட
வள்ளலுக்கெல்லாம்
வள்ளலடி
நிழல் மறந்தாலும்
நிழலின்
நிழலாய்
என் நிழலையே
தொடரும்
நீ தான்
என்
உண்மைக்
காதலியடி .........

எழுதியவர் : கீதமன் (20-Apr-14, 8:12 pm)
பார்வை : 135

மேலே