அன்புகள் பலவிதம்

இலை மேல் நீராய்
இறங்கிடும் அன்பு
நண்பனின் நட்பு
நளிந்திடும் உறவு!!

சிப்பிக்குள் முத்தாய்
பெட்டிக்குள் நகையாய்
தாய்மையின் நட்பு
தரம் வாய்ந்த உறவு

முள்ளுக்குள் சுளையாய்
பொந்துக்குள் தேனாய்
தந்தையின் நட்பு
தனித்தன்மை உறவு

புளியின் ஓடாய்
பட்டும் படாமலுமாய்
கொண்டவன் நட்பு
குறைந்திடும் உறவு!

வானுக்கு நிலவாய்
வௌித்திடும் ஔியாய்
கொண்டவள் நட்பு
கூடிடும் உறவு

இதயத்தில் கல்லாய்
இருந்திடும் உறவாய்
பிள்ளைகள் நட்பு
பிரிந்திடும் உறவு

நட்பிலே பலவிதம்
நலங்கள் பெற நாடகம்
நடபிலே சில விதம்
நிரைந்திடும் அன்புக்காய்

சுயநலம் பார்க்கவே
சுமை பல ஏற்றனர்
அன்பினை ஏற்கவே
அனைத்தையும் இழந்தனர்

எழுதியவர் : ஜவ்ஹர் (21-Apr-14, 3:16 pm)
பார்வை : 221

மேலே