காத்திருக்கிறாள் இவள்
.."" காத்திருக்கிறாள் இவள் ""...
தன் எதிர்காலத்தை எதிர்பார்த்து
ஏக்கங்களையே துணையாக்கி
காத்திருக்கும் (தே)வதையிவள்
சாரள கம்பிகளோடு கம்பியாய்
சாரை சாரையாய் சங்கடங்கள்
அவள் கண்களை வியர்க்கவிட்டு
எப்பொழுதும் தன் கன்னங்களிலே
வற்றாத சோக நதியினை சுமந்தே
வறட்சியால் வாலிபம் இழக்கிறாள்
வந்தவரெல்லாமிங்கு உண்டுசெல்ல
இலவச உணவுவிடுதியாய் இல்லம்
போய் வருவதாய் சொன்னவர்கள்
போனயிடமின்றும் தெரியவில்லை
பொன் பொருளோடு பணமென்றும்
கட்டங்கள் வரைந்து வாழ்க்கையின்
வரைபடமிங்கு அழிக்கப்படுகின்றன
விம்முகின்ற மனதோடு இவளின்கு
வெடித்து சிதறுவதை யாரறிவாரோ
இதையெல்லாம் தாண்டி வாழுமிவள்
வேதனையரியா மூடர்கள் பலரால்
பெயரிடப்படுகிறாள் முதிர் கன்னியென்று..,,
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
