தனிமை

தவழ்ந்து வீசும் தென்றலிலே
தருக்களெல்லாம் தலையசைத்து அகமகிழ
தவிப்புற்று நிற்கிறேன் தனிமையிலே......

எங்கும் மணம் பரப்பும்
எழில் மலர்கள் கூட
ஏளனமாக நகைக்கிறது
என் நிலை கண்டு.....

வெயிலில் நடக்கிறேன்,
நிழல் எந்தன் எதிரியாகி வெறுக்கிறது.....
இருளில் நுழைகிறேன்,
என் நிழல் கூட ஏமாற்றி மறைகிறது.....

எங்கும் அளவளாவும் காற்று கூட
என் கண்ணீர்த் துளிகளைக்
காய வைக்க மறுக்கிறது.......

தூறல் மன்னன் முகிலும்
துணைக்கு வர மனமின்றி
துறவியானான்.........

எழுதியவர் : அஞ்சா அரிமா (21-Apr-14, 4:29 pm)
Tanglish : thanimai
பார்வை : 112

மேலே