அண்ணா நீ ஒரு அன்னை
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு கருவறையில்
ஒன்றாய் பிண்டமாய்
இருந்தவர்கள் நாம்
ஒரு தாயின் மார்பில்
சுரக்கும் பால் அருந்தி
பசி தீர்த்தவர்கள் நாம்
இச்சைக்காய்
நம்மை பிரிந்து
தந்தை சென்றபோது
என் தந்தயாய்
உருவெடுத்தவன்
நீ...
என் பாதம்
வெயிலில் சுடும் என்று
உன் தோள்களில்
என்னை சுமந்தவன்
நீ ...
கண்ணில் பட்டதெயெல்லாம்
நான் அடம்பிடிக்க
முகம் சுழிக்காமல்
என் ஆசை தீர்த்தவன்
நீ ...
என்னை அம்மா வஞ்சி
என் இமைகள் நனைகையில்
உன் மடி சாய்த்து
என்னை அரவணைத்தவன்
நீ ...
என் பதின்னெட்டு வயதில்
பட்டினத்து மாப்பிள்ளை பார்த்து
சீர்வரிசை செய்து
என்னை சிறப்பித்தவன்
நீ ...
இரவில்
நிலவின் முகம் பார்த்து
என் முகமாய் மகிழ்ந்து
உன் சோகம் கரைத்தவன்
நீ ...
நான்கு பிள்ளைகளோடு
தாயாய் நான் இருக்கையில்
இன்னும்
பிரம்மச்சாரியாய்
தினம் கடவுளை எனக்காய் பூசிப்பவன்
நீ ...
அண்ணா
உன்னை அழித்து
எனக்கு வாழ்வளித்து
நீ மகிழ்வதற்கு
நான் என்ன தவம் செய்தேனோ ......?