ஆபத்தை உணருங்கள்
ஆபத்து நாமாக தேடிப்போவதுமுண்டு
ஆபத்து நம்மை நாடி வருவதுமுண்டு !
ஆபத்தை அறியார் வருவதும் தெரியார்
ஆபத்தை உணர்வார் வந்தபின் பலரும் !
ஆபத்து என்றும் வந்திடும் அறிவிப்பின்றி
ஆபத்து என்றதும் அடிவயிறும் கலங்குமே !
ஆபத்து பயணிக்கும் நம்முடன் பயணத்தில்
ஆபத்து விழித்திருக்கும் நாம் சயனித்தால் !
ஆபத்து நேர்ந்தால் விதிஎன்பார் விளங்காதார்
ஆபத்து நேரிடுமா விதிகளை கடைபிடித்தால் !
ஆபத்தை அறிந்தும் அறிவிலிகளின் பயணமிது
ஆபத்தை வரவேற்கும் வழியும் இதுவன்றோ !
ஆபத்தை உணருங்கள் ஆயுளை நினையுங்கள்
ஆபத்தை தவிருங்கள் ஆனந்தமாய் வாழ்ந்திட !
ஆபத்தில் சிக்கினால் உறுப்புகள் இடமாறும்
ஆபத்தில் விழுந்திட்டால் உயிரும் பறிபோகும் !
( கவிதையாக எழுதவில்லை , படத்தை
பார்த்தவுடன் எழுந்த ஆதங்கமே இவ்வரிகள் )
பழனி குமார்