காணும் கண்கள் வாழ்த்துகிறது
மலர்ந்திட்ட முல்லை சிரிக்கிறது
புலர்ந்திட்ட பொழுதை பார்க்கிறது !
பிறந்ததை எண்ணி மகிழ்கிறது
பெற்றவர்களை போற்றுகிறது !
விழிகளை விரித்து வியக்கிறது
வினாக்குறி முகத்தில் தெரிகிறது !
விந்தை உலகை நினைக்கிறது
விரைந்து வளர்ந்திட துடிக்கிறது !
பொல்லாத உலகை ரசிக்கிறது
இல்லாத இன்பத்தை தேடுகிறது !
பொறுமை காத்து யோசிக்கிறது
போலி முகங்களை காண்கிறது !
பார் போற்றிட வாழ துடிக்கிறது
ஆர்வம் அதனை தூண்டுகிறது !
காணும் கண்கள் வாழ்த்துகிறது
கனவுகள் நனவாக வாழ்த்துகிறது !
பழனி குமார்