நம்பி உள்ளது நாடும் வீடும்

கல்லூரி வகுப்பறை காட்சியிது
களைப்பா இங்கே கவிழ்ந்திட்டர் !
அறிந்தும் அறியாமல் ஆசிரியை
அவரின் தொழிலை தொடர்கிறார் !
கடமைக்காக செல்வது கல்லூரியா
காலத்தை கொல்லும் வழிமுறையா !
கற்றிடவே செல்வது கல்விக்கூடமா
சுற்றியதும் ஓய்விற்கு ஒதுங்குமிடமா !
கனவொன்று காண்பீர் இளைஞர்களே
சாதிக்கலாம் என்றாரே அப்துல் கலாம் !
கற்றிடும் நேரத்தில் தலை கவிழ்ந்தால்
போதிப்பவரும் பொறுமை இழப்பாரே !
நாளைய பாரதத்தை தாங்கும் தூண்களே
நம்பியே உள்ளது உங்களை இந்தியாவும் !
பொழுதை கழிக்க பொன்னான நேரத்தை
விழுதுகள் நீங்கள் வீணாய் நினைக்காதீர் !
காலத்தின் அருமையை புரிந்திடுங்கள்
ஞாலத்தில் பெருமைப்பட வாழுங்கள் !
அமர்வது அங்கே அறிவை வளர்த்திடவே
அயர்ந்து உறங்கிட அல்லவே அவ்விடம் !
வாழ்வும் சிறக்க வையகத்தில் வாழ்ந்திட
வருமானம் பெற்றிட வளமோடு வாழ்ந்திட
இன்பம் நிலைத்திட இல்லமும் மகிழ்ந்திட
இல்லறம் இனிதாக சிந்திப்பீர் செயல்படுவீர் !
பழனி குமார்