உழவனும் புலவனும் - சிலேடை

இரட்டுற மொழிதல் அணி என்பதே சிலேடை எனப்படும் அதாவது ஒரே பாடல் இரு பொருள் பட வருதல் இரட்டுற மொழிதல். இந்த இலக்கணத்தில் சிறந்து விளங்கியவர் காளமேக புலவர். இது செம்மொழிச் சிலேடை,பிறிமொழி சிலேடை என இரு வகைப்படும்.இங்கு உழவருக்கும் புலவருக்கும் சிலேடை அமைக்கப்பட்டு உள்ளது
------------------------------------------------------------------
நல்லவை தான்விதைத்து நாட்டுப் பிணிபோக
அல்லும் பகலும் உழைத்திடுவார் - கல்மலையும்
நல்லுலகும் போற்றும் உழவரும் நற்றமிழைச்
சொல்லும் புலவரும் ஒன்று !
-விவேக்பாரதி
------------------------------------------------------------------
உழவர் : நல்ல விதைகளைத் தேடி விதைத்து நாட்டின் பசியென்னும் நோய் போவதற்கு இரவும் பகலும் அயராது உழைத்திடுவார். வேலை செய்யும் பொழுது கல்லால் ஆன மலையையும்,நன்மை உருவான உலகையும் எண்ணி பாடல் பாடுவார்.

புலவர் : நல்ல எண்ணங்களை சொல் வயலில் விதைத்து நாட்டின் அறியாமை நோய் போக இரவும் பகலும் உழைத்திடுவார். அழகிய கல்லால் ஆன மலையையும், நன்மை உருவான உலகையும் போற்றி பாடல் புனைந்திடுவார்.
___________________________________________
விவேக்பாரதி

படம் : வெட்சி

எழுதியவர் : விவேக்பாரதி (22-Apr-14, 1:53 pm)
பார்வை : 1228

மேலே