ஒரு நாள் ரோஜா ஒரு நாள் மல்லிகை

ஒரு நாள் ரோஜா
ஒரு நாள் மல்லிகை
என்று மாறி மாறி
சூடி வருவாள் அவள் !
கன்னத்தில் ரோஜா
இதழ்களில் மல்லிகை
என்றும் சிரித்திருக்கும்
அவள் முகத்தில் !
விழிகளிலோ
காதல் மலர்த் தோட்டம் !
----கவின் சாரலன்