தேநீர் விடுதியிலே

தேநீர் விடுதியிலே
நீயும் நானுமன்று
தேநீர் குடிக்கச் சென்றோம்
என் கண்கள் கள்ளைக் குடித்தனவே
உன் கண்ணை பார்த்த பொழுது
காதல் பெருகினிலே
ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம்
பேசி முடித்த பின்பு
விடுதி முதலாளியைப் பார்த்து
தேநீர் இனிமை என்றேன்
அப்போது புரிந்தது
நாம் குடித்தது தேநீர் அல்ல
காபியடி .......
விவேக்பாரதி