காதலிங்கு கசங் க்குதய்யா

ஏர் பிடித்தான்
வார் பிடித்தான் ஏற்றத்தில்
வறுமை இன்னும் மாறவில்லை!
வளமும் இன்னும் சேரவில்லை!!

தம் பிடித்தான்
நித்தம் துடித்தான்
மகளை படிக்க வைத்தான்
மகனாய் நினைத்தான்!!

பருவம் வந்தது
பார் தடுத்தும்
பட்டம் படிக்க
பாமரன் மேலும்மேலும் உழைத்தான்!!

கல்லூரி வாசலில்
காதல் பாடம் படித்து
கஷ்டகாலத்தை மறந்து
காதலில் விழுந்தால்...

ஒருநாள் ...
உதிரம் சிந்தி
உறக்கம் தொலைத்து
உழைப்பை தந்த
உழவனுக்கு காதலெனும் இடியை தந்தாள்!!

எவ்வளவோ எடுத்து சொல்லியும்
எள்ளளவும் அசையாது
பிடியாய் நின்றால்
காதலை வென்றால்...

வீட்டை மறந்தால்
பெற்றவரை துறந்தால்
கடின உழைப்பிற்கு பரிசாய்
அவமானத்தை தந்தாள்

இனம்புரியா காதல்
கருவறையை கடந்தது
அவள் வலி மறந்தது
அவளும் ஒருநாள் உணருவாள்

தடம் மாறும் பெண்ணே
வடு மறந்ததேனோ
வறுமை நிலையிலும் உன்னை
வசதியாக்கியது பெருந்தவறா ?

இல்லை ஒரு பிள்ளையென
ஏக்கமுடன் களித்த காலம்
வந்து பிறந்த மகவே
இல்லாததாக்கி சென்றாயே முறையோ ?

படிப்பிருந்தால் பகுத்தறியும் திறன் வருமோ ?
அனுபவத்தின் வழி அறியாத மானுடமோ?
வாழ்க்கை என்கையில் என்பதுதான் முறையோ?
குணம் பார்க்காது குரங்கின் கையில் கொடுப்பது தான் நல்வாழ்வோ ?

எடுத்தெறிந்து பேசுவது நீ கற்ற பகுத்தறிவோ ?
யாரும் வேண்டாம் காதல் மட்டும் போதுமென்றால் கண்கசக்கும் காலம்
கண்ணீர் விட யார் மனம் துடிக்கும்

வேண்டி வேண்டி வளர்த்தவரை
வேண்டாமென்று நீ வெறுத்தொதிக்கி
வேண்டி பெறுவாய் மழலை செல்வமதை
வேண்டா வெறுப்பாய் அதுவொதுங்கும் போது
வலியின் வழியை நீ உணர்வாய் ...

எழுதியவர் : கனகரத்தினம் (23-Apr-14, 11:55 am)
பார்வை : 92

மேலே