இருபதுகளில்…வைரமுத்து
எழு உன் கால்களுக்கு சுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு…
ஜன்னல்களை திறந்து வை…
படி.. எதையும் படி…
வாத்சாயனம் கூடக் காமம் அல்ல – கல்வி தான் படி…
உன் சட்டைப் பொத்தான் கடிகாரம்
காதல் சிற்றுண்டி சிற்றின்பம் எல்லாம்
விஞ்ஞானத்தின் மடியில் விழுந்து விட்டதால் எந்திர அறிவுக் கொள்…
சப்தங்கள் படி
சூழ்ச்சிகள் அறி
பூமியில் நின்று வானத்தைப் பார்…
வானத்தில் நின்று பூமியைப் பார்…
உன் திசையை தெரிவு செய் நுரைக்க நுரைக்கக் காதலி
காதலை சுகி காதலில் அழு…
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம்புரி
வாழ்க்கை என்பது உழைப்பும் துய்ப்பும் என்று உணர்