அந்த கல்லூரி வாசல்

திரும்பி பார்க்கிறேன்
எனது கல்லூரி வாழ்கையை

அது எங்கோ
ஒரு மூலைக்குள்
என் மனதில் உறங்குகிறது
இனிய நினைவாக

வானில் பறக்கும்
நூலறுந்த பட்டங்களாக
சுற்றித்திருந்த அந்த
கல்லூரி வாசல்

புத்தகம் சுமக்கும் கைகளும்
காதலியின் தாவணி சுமக்கும் கைகளும்
இருக்கத்தான் செய்தன
எனது கலை பூச்செண்டில்

பிரச்சனையில் கைகலப்பதும்
பின்
ஒன்றாய் கட்டியணைப்பதும்
அரசியலில் மட்டுமல்ல
எங்கள் முன்பும்
பலமுறை அரங்கேறின

காகிதத்தால் ராக்கட் விடுவதும்
கடலை போட்டு காலம் கடப்பதும்
கடைசி நேரம் தூக்கம் விழிப்பதும்
அது கல்லூரி தந்த
தத்துவ ஞானம்

ஆசிரியரை கலாய்ப்பதும்
பின் அவரிடமே
ஆசிர்வாதம் பெறுவதும்
எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல

நான்கு வருடம் மட்டுமே
அது நாற்பது வருட அனுபவமே
ஒன்றும் இல்லாமல் வந்தாலும்
உலகத்தை கையில் தந்தது
இந்த கல்லூரி நாட்கள்

என்னை போல் எத்தனை
இந்த கல்லூரியில்
கருவறை பூக்களாய்
மலர்ந்தன
மலர்கின்றன
இன்னும் மலரும்

என் நினைவுகளைப்போல்
தினம் மலர ..........

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (23-Apr-14, 6:23 pm)
பார்வை : 152

மேலே