சந்திப்பின் நொடிகளில்
யோவ்
போயா
பாம்..பாம்
பும்ம்ம்ம்.....பும்.....பும்மம்ம்ம்
பின்வரிசைக்காரனின்
தடித்த வார்த்தை
கேட்டும்
அடித்த ஹோர்ன்
கேட்டும்
பிரம்மை கலைந்து
தெறித்து
ஓட்டினான்
பறந்து
ஓடினான்
அதுவரை
அடுத்தவர் சிக்னலை
அயர்ந்து
பார்த்துக்கொண்டிந்த
முன்வரிசைக்காரன்!!!