உலக புத்தக தினம் -படைக்கவி

"எழுத்"தில் தகவல் வந்தது
அறிவுப் பரிமாற்றமானது !
எழுதிய எண்ணங்கள் உருவாகி
ஏட்டுப் பெட்டகமானது !
புத்தகம் பிறந்த கதையிதுவே
புதுயுகம் மலர்ந்த விதமிதுவே !
உத்தம மனிதர் தோன்றியதும்
புத்தகம் செய்த விந்தையன்றோ ?
அறிவுப் புரட்சியின் ஆரம்பமே
அறியாமை இருள் நீக்கியதே !
அறிவை தேடும் பயணமதில்
அறிவியல் கூறுகள் விழுமியதே !
கல்விக் கடலில் புத்தகமே
கரை காட்டிய விளக்காகும் !
கற்கும் கருவிகள் பலவந்தும்
புத்தகம் போலே ஏதுமுண்டோ..!
போதிமரமாய் புலவர் பலர்
புத்தக மொழியில் புதுமைதர
சோதிச்சுடர் பல சூரியனாய்
சூத்திர உலகில் உதித்தனரே !
இருபத்து மூன்று மார்ச்சு
இரண்டாயிரத்து பதினான்கை
இருதயத் துடிப்பில் வைத்திடுவோம்
உலக புத்தக தினமாக !