வைத்தியர் சொல்லிட்டாருங்க

வைத்தியர் சொன்னாருங்க
வைட்டமின் உண்ணுங்க
வயிரை குறைத்திடுங்க
வாழ்ந்திடுங்க நீண்டகாலம்

அவரேதான் சொல்லிட்டாருங்க
உதிரம் சோதிங்க
உடல் சலமும் சோதிங்க
ஆயுள் காலம் நீண்ட காலம்

அவர்தான் சொன்னாருங்க
வௌ்ளம் வேணாங்க
வெண்ணெய்யும் வேணாங்க
வளமாக வாழ்ந்திடலாம் பல காலம்

காலை மாலை நடந்திடுங்க
கால்கைய ஆட்டிடுங்க
சோம்பலை விட்டொழிங்க
சுகமாகும் ஆயுட்காலம் நீண்டிடுங்க

அவரேதான் சொல்லிட்டாருங்க
அதிகமதிகம் உண்ணாதைங்கோ
உடல் பருமன் குறைத்திடுங்க
உடலழகுடன் வாழ்ந்திடலாம் நீண்டகாலம்

உடல் மட்டும் குறையலிங்க
உடமையெல்லாம் குறைந்திட்டுங்கோ
கடமை செல்ல உடல்மறுக்குதுங்க
காலன் பயம் வருகிதுங்க

நோய்கள் பல சேர்ந்ததுங்கோ
நெருப்பாய் உடல் கொதிக்குதுங்கோ
தலை லேசா சுத்துதுங்க
தைரியம் இழக்கக்கூடாதுங்க

எழுதியவர் : ஜவ்ஹர் (23-Apr-14, 10:33 pm)
பார்வை : 686

மேலே