கடைசி ஓவர்

ஷேக்கு - பேக்கு உரையாடல்

ஷேக்கு : என்ன பேக்கு! தேர்தல் பிரச்சாரம்
எல்லாம் முடிந்ததா ?

பேக்கு : ஆமா ஷேக்கு . கடுப்பாயிடுச்சு
தெரு தெருவா நாய் மாதிரி
அலைஞ்சு கணக்கு வழக்கு
பார்த்து
வேஷம் போட்டு
வேஷத்தை கலைச்சு
தொண்டை தண்ணி வத்த கத்தி

காசு கொடுத்தா கூட
வேஷம் போட முடியலே

ஷேக்கு : இதுக்கே இப்படி நொந்துக்கிரியெ
5 வருட ஆட்சியில் மக்கள் பட போற
கஷ்டத்தை நினிச்சியா ?

பேக்கு : என்னவோ போ! ஷேக்கு
வீட்டிலே மனைவி ஆட்டி வைக்கிறா
வெளியிலே இவனுங்க ...

நம்ம பாடு திண்டாட்டம் தான் .
காலம் தான் பதில் சொல்லனும்

நேற்று கடந்த காலம்
இன்று நிகழ் காலம்
நாளை எதிர் காலம்

ஜக்கம்மா சொல்றா
நல்ல காலம் பொறக்க போவுது
நல்ல காலம் பொறக்க போவுது

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (23-Apr-14, 10:31 pm)
பார்வை : 94

மேலே