காலம்
காலத்தின் பிடியில் சிக்கிக் கிடக்கிறோம்
காலம் போட்ட கோலத்தின் புள்ளியாக !
விதியின் சதிகள் ஓடும் சாலையில்
நெடும்பயணம் கொள்ளவே வேண்டும்
அதே காலமடா!
என் கன்னத்தில் வடிந்த கண்ணீரின் ஈரம் காய்வதற்குள்
மாறும் காலத்தின் வேகம்
ஒவ்வொருவரின் கண்ணீருக்கும் விடை தரும்
விடியல் சிலநேரமடா !
சில்லென ஒரு தென்றல் வீசும் கணம்கூட
ஒரு குறுங்காலமே !
தீய வலையில் உள்ள சிலந்திகள்
வெளியேற வழி வகுப்பதும் காலம்தானடா!