ஜனநாயகம்

நாயகம் பெருத்த
இந்நாட்டில்
ஜனநாயகம்
மறஞ்சு நாளாச்சு...

கோடிகள் சுருட்ட
கொடிகள் உயர்த்தி
படி படியாய் ஏறி
நோட்டுக்களில்
ஜனநாயகத்தை
கூறு போடும் காலமாச்சு...

கதர் வேட்டிகள்
மறஞ்சு நாளாச்சு
நாடும்
நமது நலமும்
ஊசலாச்சு...

கண் இருந்தும்
குருடர் நிலையாச்சு
இதுவே இந்தியாவின்
நிலையாச்சு...

எழுதியவர் : வைரமுத்து S T (24-Apr-14, 4:51 pm)
Tanglish : jananayagam
பார்வை : 96

மேலே