நீ உணராத என் காதல் 0015

குழைந்தையின் ஈர
முத்தங்கள் போலில்லை
உலர்ந்தவுடன் மறந்து போக
உன் நினைவுகளை

எத்தனை தடவை
உன் வெறுப்பு நிலை மாறவைத்தாலும்
முடியாது முற்றாக உன்னை மறக்க

ஏழு கடல் ஆழம்போலுள்ள
என் உறவுகளின் பாசத்தை
உன் ஒரு துளியின் அன்பால்
மறக்க நினைத்தேன் .......

உன் உறவுகளின்
விஷம் கக்கும் வார்த்தைக்குப் பின்னால்
பார்வையற்ற வௌவாலைப்போல்
முட்டி மோதும் உன் பயணத்தைப் பார்த்து
இந்த பாழாய் போன
பாதகனின் மனது பொறுக்கலடி

அழகு என்ற ஆணவம்
ஆற்றில் வாழும் பேத்தை போன்று
பண ஆசை கொண்ட மனதுக்கு
குணமேயில்லையென்றும்
மனதில் குணம் நிறப்பி
உள்ளங்கையால்
பணத்தை பற்றிக்கொள்
உன் வாழ்வு மகிழ்ச்சியால் நிறம்பும்

சில ஆண்களின் முடிச்சுக்குள்
மாட்டிக்கொண்ட பின் அறிவாய்
என் ஆழமான காதலை ......

அ க ம ல் தா ஸ்

எழுதியவர் : (24-Apr-14, 8:53 pm)
பார்வை : 98

மேலே