உண்மை தானே

அறிவில் தெளிவை ஏற்றிடும் உத்தியை கற்றுக்கொள் மானிடனே....
உன் புலன்களின் வாயிலாய் அழித்திடும் சக்தியை
மூளைக்குள் மெல்ல ஏற்று!
நீ செய்யும் தவறெல்லாம் உற்று நோக்கு அது விலங்கின் தொடர்ச்சி தானே
மனிதன் என்று நம்மை அழைத்த காரணம் அன்பிற்கு உவமை தானே
களவு பொய் காமம் அகற்றிடு பின்
நீ கடவுள்
பிளவு கொண்ட மனதை அன்பை வைத்து நிரப்பிடு
அதுவே அமைதிக்கு வழி
உன் கற்பனை எல்லாம் பேனாவை நிரப்பட்டும்
வாழ்க்கைக்கு வேண்டாமடா
எல்லாம் மாறும் உழைப்பொன்று போதும் இவ்வையகத்தை வெல்லலாமடா!

எழுதியவர் : தீனா (25-Apr-14, 11:21 am)
சேர்த்தது : தீனா கவி
Tanglish : unmai thaane
பார்வை : 112

மேலே