உன் கையில்

புரிந்ததா
விடுவிடு
புரியலையா
விடுவிடு

கோபம் வந்தால்
கொஞ்சம் தண்ணீர்
குடி

ஆத்திரம் வந்தால்
வெளிக்காற்றில்
மெல்ல
நட

வெறுப்பு வந்தால்
வெறுமனே
சிந்திக்காமல்
கிட

மனம்
மறுப்பு சொன்னால்
வேறு
இடத்துக்குப் போ
வேறு
மனிதனிடம் போ

கொக்கரிப்பு கண்டு
கோணாதே
நக்கல் செய்து
நழுவாதே

ஒன்றைப்
பிடித்து
ஒழியாதே
ஒளிராமல்
திரியாதே

சிவனானாலும்
எவனானாலும்
பாதி பாதி
கலவைதான்

கணம் காணும்
இரணம் போதும்
மீதி பாதி
உன்
கையில்தான்

புரிந்ததா
விடுவிடு
புரியலையா
விடுவிடு

எழுதியவர் : சர்நா (25-Apr-14, 12:55 pm)
Tanglish : un kaiyil
பார்வை : 346

மேலே