+பழக்கப்படுத்திக்கொள்+

உதவி செய்வதை பழக்கப்படுத்திக்கொள்
உதடு சிரிக்க பழக்கப்படுத்திக்கொள்
உண்மை பேச பழக்கப்படுத்திக்கொள்
உன்னை உணர பழக்கப்படுத்திக்கொள்

உரிமையைப் பெறவே பழக்கப்படுத்திக்கொள்
உலகினை ரசிக்க பழக்கப்படுத்திக்கொள்
உற்சாக சிந்தனைக்கு பழக்கப்படுத்திக்கொள்
உயர்ந்தோர் போற்ற பழக்கப்படுத்திக்கொள்

உழைத்து வாழவே பழக்கப்படுத்திக்கொள்
உறக்கம் களையவே பழக்கப்படுத்திக்கொள்
உறவாய் பழகவே பழக்கப்படுத்திக்கொள்
உறுத்தாத பேச்சுக்கு பழக்கப்படுத்திக்கொள்

உதவிக்கு நன்றிசொல்ல பழக்கப்படுத்திக்கொள்
உரிமையாய் நட்பைதிருத்த‌ பழக்கப்படுத்திக்கொள்
உயர்ந்தோரின் வழிநடக்க பழக்கப்படுத்திக்கொள்
உற்சாக கவிபடிக்க பழக்கப்படுத்திக்கொள்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Apr-14, 11:26 am)
பார்வை : 141

மேலே