நினைவுகள்

சிறு மொழி பேசி சின்ன குறும்புகள்
செய்த காலம் எல்லாம் என் நினைவில்
வந்துவந்து போகும் அதை நான் உங்களுக்கு
சொல்லப்போகிறேன்

அன்று ஒரு நாள் நான் பாலர் வகுப்பில்
இருந்தேன் அங்கு பல குழப்படிகள்
வகுப்பாசிரியர் கையால் அடி வாங்கி
அழுது கொண்டு வீடு ஓடி வந்து
நான் இனி அங்கு போகமாட்டேன்
என அம்மாவிடம் சொன்னது
எனது நினைவில்

அந்த நாட்கள் உருண்டோடி போன பின்னே
நான் பெரிய வகுப்பில் படிப்பதாக உணர்ந்தேன்
விளையாட்டு பாடம் பார்ப்பது
என திரிவதுதான் எங்களுக்கு வேலையாக
இருந்தது படிப்பில் புள்ளிகள்
எடுப்பது குறைவு

வீட்டில் ஒவ்வொரு நாளும்
பெரிய முழக்கம் என் காதுகளில் வந்து
சேரும் என்ன செய்வது என்று எனக்கு
தெரியாமல் இருக்கும் பள்ளிக்கூடத்திலும்
அப்படித்தான்

பின்பு காலம் மாறியது
படிப்பில் ஆர்வம்
பரீட்சை என்றால் பயம்
புதிய நண்பர்களின் வருகை
அவர்களுடன் நட்பு
நகைச்சுவை பேசும் நண்பர்கள்
என பாள்ளி வாழ்க்கை
சந்தோசமாக

பின்பு பரீட்சையில்
சித்தி பெற்ற சந்தோசம்
சில நண்பர்களின்
பிரிவு
என காலங்கள் கடந்து

பெரிய பரீட்சை
எழுதும் காலம் அது
இக்காலத்தில் பல கிறுக்கல்கள்
ஒரு பெண்ணுக்கு ஒன்பது சுற்றியதும்
நண்பனுக்காக தூது சென்று
கரடு முரடான வார்த்தைகளை காது
வாங்கியதும்
பாடம் இல்லை என்றால்
வகுப்பறையில் எங்கள்
விளையாட்டுத்தன்
ஆங்கில பாடம் என்றால் அங்கு நாங்கள்
இல்லை
மறு நாள் அது தொடர்பான விசாரணை
மற்றவர்களுக்கு நாக்கால் பண்ணுவதும்
சிலவேளை அது பெரிய
சண்டையாகிவிடும்
எல்லாம்
கொஞ்ச காலம்

பள்ளி வாழ்வு
முடிய போகிறது
என்ற கவலை எங்கள்
மனங்களில்
அந்த நாள் வந்தது
அதற்கு பெயர் பிரிய விடை
அந்த நாள் அன்று எங்கள்
முகங்களில் உலகம் அழிவது போல்
இருந்தது
அன்றுதான் தெரிந்தது
பள்ளி வாழ்கையின் மகத்துவம்

எழுதியவர் : thegathas (26-Apr-14, 1:50 pm)
சேர்த்தது : தேகதாஸ்
Tanglish : ninaivukal
பார்வை : 136

மேலே