உன் நினைவோடு நான்

கனவில் நீ வருவாய் என்பதால் கனவுக்காக நான்
காத்திருந்தேன்
ஆனால்,
கனவு தூக்கத்தில் வரும் என்பதால்
தூக்கத்திற்காக காத்திருந்தேன்
தூக்கம் இரவில் வரும் என்பதால்
இரவிற்காக காத்திருந்தேன்
கனவும்,இரவும்,தூக்கமும்
வரவில்லை
அதற்கு பதிலாக காத்திருந்தற்காகவே !
பல
நாட்கள்,மாதங்கள்,வருடங்கள்
வந்தன
கூடவே, என் மறைவும் வந்தது
ஆனாலும், நான் சந்தோஷபடுகிறேன்
உனக்காக காத்திருந்து தானே!
எனக்கு உயிர் போனது என்று!
உன் நினைவோடு நான்! ...........................

எழுதியவர் : கௌசல்யா (26-Apr-14, 2:58 pm)
Tanglish : un ninaivodu naan
பார்வை : 133

மேலே