விழித்துக் கொள் எழுந்து வா

பெண்மையே!!!

உன்னைப் பச்சை பயிர் என்று இம்மண்ணின் மாந்தர்கள் பாடி பாராட்டு கொடுக்கின்றனர்!!!
ஆனால்,
உன்னை முளையிலே நெல்லை கொடுத்துக் இம்மண்ணின் மைந்தர்கள் கொன்றுவிடுகின்றனர்!!!

உன்னை வீட்டிற்கு குல விளக்கு என்று பாராட்டுகின்றனர்!!!
ஆனால்,
உன்னை, உன் உயிரை தீயிலே போட்டு புரட்டுகின்றனர்!!!

விழித்துக் கொள்! எழுந்து வா!

பெண்மையே!!!

உன்னை கற்புக்கரசி என்று கூறி பாராடுகின்றனர்!!!
ஆனால்,
உன் கற்பையே சூறையாடி விளையாடிப் பார்கின்றனர்!!!

பெண்மையே!!!

உன்னை மான் விழியே! தேன் மொழியே! கண்ணே! கனியமுதே! என்று இம்மண்ணில் கவிஞர்கள் வர்நிக்கின்றனர்!!!
ஆனால்,
மான்விழி கொண்ட பெண் மகவு பிறந்தால் ஏன் தான் கண்ணீர் வடிகின்றனரோ ??

விழித்துக் கொள்! எழுந்து வா!

பெண்மையே!!!

நீ உலகிற்கே ஒளி என்று பறைசாற்றுகின்றனர்!!!
ஆனால்,
சிறு முளையிலே திருமணம் என்ற சடங்கில் உன்னை உடன் கட்டை தீயில் போட்டு நசுக்குகின்றனர்!!!

அதுமட்டுமன்றி,
திருமணத்தில் மனை அரசன் தன்னுயிர் நீத்தாள்,
உன் பூ மனம், பொட்டின் குணம், நிறந்தின் தன்மை துறந்து,
வெறுமனதுடன் விதையிலே விதவையாகுகின்றனர்!!!

விழித்துக் கொள்! எழுந்து வா!

பெண்மையே!!!

உன் கூந்தலின் மணத்தின் மயக்கத்தில் கவிதை பாடினர் பலர்!!!
ஆனால்,
கட்டைக்கு சேலை உடுதிருந்தாலும், அதனை கூட உரசிப் பார்கின்றனர் பலர்!!!

விழித்துக் கொள்! எழுந்து வா!

உன் வழிகளில் வரும் களைகளை வெட்டி எறிந்துவிடு!
ஒரு வீட்டிற்க்கு குலவிளக்கான நீ, இந்த உலகிற்கே சூரியனாகி விடு!
உன் கற்பை சூரையாடுபவர்களை கனலென எரித்துவிடு!
உன் சிசுவை அழிக்க முற்பட்டால், சிறுத்தையென சீறிவிடு!
சிறு வயதிலே திருமணம் என்றால், சிங்கமென பாய்ந்துவிடு!

பெண்ணே!

நீ கொடுமை நீக்கி கொடை செய்வதில் உயர்ந்து விடு!
நீ உறங்கி கொண்டிருக்கும் புயல்! தடம்மாறி சில மலை குன்றுகளால் உன் வழியை சிதைக்காதே!!!

விழித்துக் கொள்! எழுந்து வா!

வளைந்து கொடு!! வீழ்ந்து விடாதே!!
அன்பு காட்டு!! அழிந்து விடாதே!!
பெண்மை என்பதை புரட்சியக்காமல் பூகம்பமாய் ஒவ்வொரு பெண்ணிலும் எரிமலையென வெடித்து விடு!!!

எழுதியவர் : எண்ணத்திரவங்கள் (26-Apr-14, 4:15 pm)
சேர்த்தது : எண்ணத்திரவங்கள்
பார்வை : 271

மேலே