நவரத்தினம் சொல்லும் காதல்

காதல் பேசும் கயல்விழிகள் உற்று நோக்கின்
ஆஹா வைரமா வைடூரியமா
நாணம் மின்னும் மான்விழிகள் சற்று நோக்கின்
ஆஹா பவளமா புஷ்பராகமா
நேசம் சேர்க்கும் மலர்விழிகள் கூர்ந்து நோக்கின்
ஆஹா மரகதமா மாணிக்கமா
ஊடல் தெறிக்கும் கனல்விழிகள் அகன்று நோக்கின்
ஆஹா கருநீலமா கோமேதகமா
கூந்தலின் வாசம் சர்ச்சை அன்று
தும்பிகள் சூழ்ந்து இயற்கை என்றானது
கண்களின் வசீகரம் search இன்று
நவரத்னங்கள் சூழ்ந்து காதலை இயக்குது
காதலின் தீராத சர்ச்சை என்றும்
அதிக சத்தம் சிந்துவது முத்துக்களா முத்தங்களா...

எழுதியவர் : கார்முகில் (26-Apr-14, 12:46 am)
சேர்த்தது : karmugil
பார்வை : 492

மேலே