என் அழகை நீ இசைக்க

கன்னத்தில் மையிட்டு,
தலைசாயாய் நிதம் பிடித்து,
புரியா மொழியில்
தினம் புகழிய அன்னையே..!
உன் அழகை நான் ரசிக்க
என் அழகை நீ இசைக்க,
உனது இனிய பாடலோடு
உந்தன் மடியில் மைய உறங்க.
என் களைப்புகள் அத்துனையும்
காற்றாய் பறக்கும்.,
உன் கவலைகள் அத்துனையும்
கனவாய் விடியும்.,
என்ற நம்பிக்கையோடு..!