ஒரு தாயின் பிரிவு

மனசு பாரமாய் உள்ளபோது
பரிவுடன் பழக நீ இல்லை
ஆற்றல் இழந்த என் நிலையை
ஊக்கபடுத்த நீ இல்லை
என் தவறுகளை துல்லியமாய்
தடைசெய்ய நீ இல்லை
தோள் சாயத்தான் ஆசை - ஆனால்
தோள்களோ தொலைவினில் என்னை
துன்புறுத்துவதை தடுக்க நீ இல்லை
ஆற்றலாய் அணைத்து என்னை
செம்மைபடுத்தி செயல்கள்புரிய நீ இல்லை
தொலைகாட்சியில் தொலைந்த என்னை
திட்ட நீ இல்லை
காற்றோடு பூ உறவாடுவதை போல-என்
மனதோடு மனம் உறவாட நீ இல்லை
காற்று எத்திசையில்
திக்கிமுக்கி திரிந்தாலும் என்றும்
பூவின் வாசத்தை இழக்காது
நான் உன் மகள் உன் வாசத்தை தவிர
வேறு சுவாசத்தை சுகிக்கமாட்டேன்

எழுதியவர் : இலக்கியா (26-Apr-14, 11:18 am)
சேர்த்தது : மு இலக்கியா
Tanglish : oru thaayin pirivu
பார்வை : 4235

மேலே