விளையாடவிடு

உனக்காகத்தான் என்று
ஓடி ஓடி உழைக்கும்
என் அம்மாவே....

இன்று ஒரு நாளாவது
என்னை
கைப்பிடித்து பள்ளிக்கு
சாலையில் அழைத்துச்
செல்....

பக்கத்தில் இருக்கும்
பூங்காவில் போதும் போதும்
என்று சொல்லாமல்
விளையாடவிடு....

சொட்டு சொட்டாய் விழும்
தூரலில் நனையவிடு...

அச் அச் என தும்மல் வந்தாலும்
பரவாயில்லை
ஒரே ஒரு பனிக்கூழ்
மட்டும் வாங்கிக்கொடு...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (25-Apr-14, 10:35 am)
பார்வை : 229

மேலே