அம்மாவின் குரலில் 0019

கடன் வாங்கி கடல் கடந்த பயணம்
தேடலில் கிடைத்த நண்பர்கள்
குழுமி வாழ்ந்த உறவுகள்
வாடி வாழ்கிறது வசதி
தேடி வந்தவன்
நலமறிய என்னிடம் கைபேசி
ஊர்க்கதை பேசி பசுமை உள்ளடங்கும்

அம்மாவின் குரலில்
வீட்டின் சூழ்நிலை புரியும்
கடன் காரன் வருகையால்
கவலைகள் அடுக்கிக்கொண்டு
கை மாறும்
குட்டி தங்கையிடம் ஆவளோடு
ஆசைகளை கொட்டித் தீர்ப்பாள்
அன்புத்தங்கை சாப்பிட்டாயா அண்ணா என்பாள்
அம்மம்மா நீ எப்ப வரா மகனே ஏக்கமான வார்த்தையுடன்
அப்படியே இருக்க
வீக் விக் என்ற சத்தம்
காசி முடிவதற்கான அறிகுறி
அமைதியாகும் கைபேசி

அ க ம ல் தா ஸ்

எழுதியவர் : அ க ம ல் தா ஸ் (24-Apr-14, 9:45 pm)
Tanglish : ammaavin kuralil
பார்வை : 218

மேலே