என் தோழிக்கு பிறந்தநாள்

உன் இரு விழிகளின்
கருவிழியின்
அசைவில் வாழும்
பட்டாம் பூச்சிகளின்
இறகுகளில்
வானவில்லின் வண்ணமெடுத்து
தங்கத் தூரிகையில்
எழுதுகிறேன் இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

புல்லின் மீதுறங்கும்
பனித்துளிகளைச் சேகரித்து
உன் புன்னகையின்
பூக்களைப் பறித்து
அதன் வண்ணங்களில்
அன்பெனும் வார்த்தைகள்
கோர்த்து வாழ்த்துகிறேன்
நீ வாழ்க!

நிலா நீரருந்தும் தடாகங்களில்
பூத்திருக்கும் அல்லிமலர்கள்
உன் பிறப்பால் பூரிக்க!
வாரிக்கொடுக்கும் வள்ளலென்று
உன்னால் வழ்விக்கப்படுவோர்
வாயாற வாழ்த்த!
அநேகப் பெண்களில்
பேறுபெற்றவள் எனக்
கொண்டவனும் வாழ்த்த!

கருவறையைக் கற்பகிரகமாக்கி
பிள்ளைகளைத் தெய்வமெனப்
பெற்றெடுத்த உன் பெண்மை
வாழ்கவென்று உன்
மழலைகளும் வாழ்த்த!
உன் புன்னகையில் சிக்கி
செக்குமாடாய் உனைசுற்றும்
நானும் வாழ்த்துகிறேன்!
நீ வாழ்க பல்லாண்டு!
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..................!

..................சஹானா தாஸ்!

(என் இனிய தோழி ஹேமா எலிசபெத்துக்கு இன்று பிறந்த நாள்)

எழுதியவர் : சஹானா தாஸ் (27-Apr-14, 11:28 am)
Tanglish : en thozhiku
பார்வை : 747

மேலே