33-தந்திர காட்டில் நான் 4-உள்முக தரிசனம்-கார்த்திக்
தத்துவதரிசனம் (29)
முன்பெல்லாம் தர்மத்தை நோக்கி சென்றவர்கள்
தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் இருந்தார்கள்
ஆகையால் புவிமிசை தர்மம் வியாபித்திருந்தது ......
ஆனால் இன்றோ ஆத்ர்மம் செய்கின்றவன்
தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும்
இருக்கிறான் பின் எப்படி தர்மம் வியாபிக்கும்
அன்பே ....
தர்மத்தை பின்பற்றும் மனிதர்களிடம் சென்று சொல்
தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் இருக்கும்படி
சொல் அப்போதுதான் தர்மம் ஜெய்க்கும,அதர்மம் அழியும் .
தத்துவதரிசனம் (30)
உலக வாழ்கையில் புத்துணர்வோடு இருக்க ஒரே
வழி ,வாழ்கையில் உள்ள அனைத்து அம்சங்களையும்
முழுமையாக அனுபவிப்பதுதான் .....
சிக்கலுக்கான தீர்வு,சிக்கலை தள்ளி வைப்பதால் ஏற்படாது ....
சிக்கலை புரிந்துகொண்டால் மட்டுமே சிக்கலிடம் இருந்து
விடுபட முடியும்,சிக்கலை தீர்க்கவும் முடியும் .....
ஆகையால் முழுமையாக ஏற்றுகொள் ,அனுபவி புத்துணர்வோடு இருப்பாய் .
தத்துவதரிசனம் (31)
குழந்தையின் முகத்தை பார் அவ்வளவு
தெளிவாக இருக்கும் ,காரணம் தெரியும் அன்பே ?....
அதனிடம் குடிகொண்டுள்ள புதுமையான
அணுகுமுறைதான் எல்லாவற்றையும்
புதுவிதமான கற்பனை லயத்துடன்அணுகிகொண்டிருக்கும்......
அந்த லயம்தான் தெளிவுக்கு காரணம் .....
நீயும் அப்படி இருந்தவன்தான் ஏனோ சில குழப்பங்கள் ...
ஏனோ சில நாகரீகங்கள் உன்னை
துண்டு துண்டாக நறுக்கி போட்டுவிட்டது
அந்த ரணத்தின் சீழ்தான் இந்த கோரதன்மைக்கு காரணம் ....
புதுமையான அணுகுமுறையில் லயமானால் மீண்டும் நீ குழந்தைதான் .......
************(தத்துவதரிசனம் தொடரும் )***********
என்றென்றும் அன்புடன்
கார்த்திக்