தந்தையின் தவிப்பு

என்னையே சுற்றி சுற்றி வந்த மகள்...

அன்னையின் அதட்டலையும் பொடுட்படுத்தாமல்
என் பக்கத்திலேயே உறங்கியவள்..
எனக்கு அன்னையாக இருந்த மகள்...

திருமண வயது வந்து
கணவன் வீடு சென்ற மகள்...
நீண்ட நாட்கள் கழித்து
இதோ விடிந்ததும் வரப்போகிறாள்....

ஊரே உறங்குகிறது
எனக்கு மட்டும் உறக்கம் வரவில்லை...

வராண்டாவிற்கும் வாசலுக்கும்
நடந்து நடந்து இதோ விடிந்து விட்டது
எனதருமை மகள் வந்துவிட்டாள்....

பேத்தியை வாங்கிக்கொண்டேன்..

எனதருமை மகளின் முகத்தில்
சிரிப்பெங்கே போனது...
அவள் சிரித்தால் கன்னத்தில் விழும் குழி எங்கேபோனது..

காரணமே இல்லாமல் கணவன் அதட்டுவதாக‌
காதில் விழுந்தது...

கையில் பேத்தி
விளையாட்டுக்குதான் ஒரு தட்டு தட்டினேன்..

பதறினார் மாப்பிள்ளை...

ஒரு வயது மகளை விளையாட்டுக்கு
அதட்டியதற்கே இப்படி..
என் இருபத்திமூன்று வயது மகளின் முகத்தில்
சிரிப்பெங்கே போனது என்றேன்...

மன்னித்து விடுங்கள்..
இனி அவளின் முகத்தில் சிரிப்பு மட்டுமே
இது என் மகளின் மீது ஆணை என்றார்..

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (27-Apr-14, 7:39 pm)
பார்வை : 185

மேலே