நினைவுப்போக்கி
ஓயாமல்
புகை படியப் படிய
கறுத்துப் போன
புகைபோக்கியாய்
ஓயாமல்
உன் நினைவுகள்
படியப் படிய
நானுமோர்
நினைவுப் போக்கி !
ஊடலும் கூடலும்
அங்கங்கே
தூசும் தும்புமாய்
கொஞ்சம் குமுறலும்,
கொஞ்சலாய்
தொண்டைச் செறுமலும்
கரிகரியாய்
எண்ணக் கமறலும்...
அப்பப்பா ....
நானுமோர்
நினைவுப் போக்கி - உன்
நினைவுகளைப்
போக்கியதால் அல்ல !