அதுவரைதான் உயிர்த்திருப்பேன்

உன் பார்வைகளில்
பற்றி எரிகின்றவள் நான்..!!

நீ
பார்க்கும் வரைதான்
என் உயிர்த்தீ
சாம்பலாகாமல்
எரிந்துகொண்டிருக்கும்..!!

உன் பேச்சினில்
சிக்கிக் கிடப்பவள் நான்..!!

நீ
பேசும் வரைதான்
எமன் பார்வையில்
சிக்காமல் இருப்பேன்..!!

உன் புன்னகையால்
தேன் பருகி
மயங்கிக் கிடப்பவள் நான்..!!

தேன் சுவை மனதினை
நனைக்கும் வரைதான்
நான் உயிர் சுமந்திருப்பேன்..!!

உன் திசை நோக்கித்தான்
நான் நடக்கின்றேன்
அந்த
பாதச் சுவடுகளை
அழித்துவிட்டுச் சென்றுவிடாடே..!!

நான்
திக்குத் தெரியாமல்
காணாமல் போய்விடக் கூடும்..!!

அத்தகைய
பார்வைகளிலும்
வார்த்தைகளிலும்
புன்னகைகளிலும்
பாதச் சுவடுகளிலும்
எனக்கான
உன் காதல்
இல்லாமல் இருக்கலாம்..!!

உனக்கான
என் காதலை
அவற்றுள்
வைத்துத்தான்
நான் உயிர் வாழ்கின்றேன்..!!

எழுதியவர் : வெ கண்ணன் (28-Apr-14, 4:00 pm)
பார்வை : 121

மேலே