அழகான மனிதர்கள்
தோல்வியை கண்ட
இன்னல்களை சந்தித்த
போராட்டங்களை உணர்ந்த
இழப்பை எதிர்கொண்ட
இராணுவ வீரர்கள் ..........
வாழ்க்கையின்
பாதையை
ஆழத்திலிருந்து
கண்டறிந்தவர்கள் .....
விடை பெறுதலில்
ஏக்கங்களை
வருத்தங்களை
புரிதல்கள் மூலம்
உணர்த்தியவர்கள் ......
இடைவெளிகள் கடினமல்ல
தியாகங்கள் கடினமல்ல
தூரங்கள் கடினமல்ல
கவலைகள் கடினமல்ல
இவரை மறப்பது தான் கடினம்
ஒரு இராணுவ வீரனின்
துணைவியின் எழுத்துக்கள்! ..
நாட்டிற்காக
வாழ்க்கையை துறக்கும்
அழகான வீரனின்
தியாகங்களுக்கு
சேவைகளுக்கு
நம் அன்பின் வாயிலாய்
உணர்வுகளின் வாயிலாய்
புரிதல்களின் வாயிலாய்
நன்றி செலுத்தி அன்பு செலுத்தி
பெருமை படுத்துவோம் !!!
அழகான மனிதர்கள் .........

